சினிமா

நடிகர் ராஜேஷ் இறப்புக்கு காரணம் இது தான்! சகோதரரின் வௌிப்படுத்தல்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் நேற்று (29) தனது 75 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

1974-ல் கே. பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘கன்னிப் பருவத்திலே’, ‘அந்த 7 நாட்கள்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் புகழ்பெற்ற இவர், “ஓம் சரவண பவ” என்ற யூடியூப் சேனல் மூலம் ஆன்மிகம், ஜோதிடம் குறித்து பகிர்ந்து, ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தார்.

இந்நிலையில், ராஜேஷின் மறைவு குறித்து அவரது சகோதரர் அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “காலை 6.00 மணிக்கு அண்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சித்த மருத்துவரை அழைத்தோம், ஆனால் அவர் இரண்டு மணி நேரம் பேசி தாமதப்படுத்தினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால், அண்ணன் உயிர் பிழைத்திருப்பார்.

மாரடைப்பு அல்ல, தாம்பரத்தைச் சேர்ந்த அந்த சித்த மருத்துவரின் தாமதமே மறைவுக்கு காரணம்,” என அவர் தெரிவித்தார்.

ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…