இலங்கை

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

காலி மாவட்டத்தில் பத்தேகம, கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோறளே, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, நோர்வூட் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…