இலங்கை

அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எமது நாட்டையும் மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…