No products in the cart.
கனடாவில் கோவிட் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கனடாவில் கோவிட் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் புதிய திரிபு தொடர்பிலான தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஒமிக்கிறோன் திரிபின் உப திரிபுகள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின் பிரகாரம் NB.1.8.1 என்ற திரிபு பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய வகை திரிபு பரவுகை தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நோய்த்தொற்று பரவுகை தீவிர அளவில் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த நோய் தொற்று அமெரிக்காவிலும் ஏனைய பல நாடுகளிலும் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.