சினிமா

அதிரடி முடிவெடுத்த நடிகர் கமல்ஹாசன்!

தக் லைஃப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப், திரைப்படம் வரும் 5 ஆம் திகதி வெளியாகிறது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவில் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நடிகர் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தனது படத்தை வெளியிட அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது எனவும், திரையரங்குகளில் படம் தடையின்றி வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…