இலங்கை

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 17,214.39 புள்ளிகளாக பதிவாகியதுடன், இது 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பதிவான முந்தைய அதிகபட்சமான 17,193.8 புள்ளியை முறியடித்துள்ளது.

இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 234.50 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு காரணமாவதுடன், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, DFCC வங்கி, சென்றல் பினேன்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு அதிக பங்களிப்பை வழங்கியது.

பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.37 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…