கனடா

அமெரிக்க வரி விதிப்பிற்கு கனடா எதிர்ப்பு


அமெரிக்கா, இரும்பும் மற்றும் அலுமினியத்திற்கான வரிகளை இரு மடங்காக உயர்த்தியமை குறித்து கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

உலகத்தின் அனைத்து நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு வரிகளை இருமடங்காக அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கையை “சட்டவிரோதமானதும், நீதியற்றதுமானதும்” என கனடாவின் பிரதமரின் அலுவலகம் (PMO) கடுமையாக விமர்சித்துள்ளது.

“இந்த வலுக்கட்டாய வரிகளை நீக்குவதற்கான புதிய பொருளாதார, பாதுகாப்பு உடன்பாட்டை அமெரிக்காவுடன் தீர்மானிக்க கனடா தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது,” என பிரதமர் அலவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், கனடா விதித்த பகிரங்க பதிலடி வரிகளிலிருந்து 90 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட வருமானம் கனடிய தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் புதிய வரிகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய இராச்சியம் மட்டும் இந்த உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…