உலகம்

ட்ரம்பின் உத்தரவுக்கு வலுக்கும் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் மீது விதித்த தடையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டித்துள்ளது.

அதிபர் ட்ரம்பின் முடிவு மிகவும் கொடூரமானது மற்றும் இனவெறி கொண்டது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

தேசியத்தின் அடிப்படையில் தனிநபர்களைக் குறிவைத்து இதுபோன்ற தடையை விதிப்பது ஒரு வகையான வெறுப்பு என்று “Human Rights First” என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில், ஆப்கானிஸ்தான், மியன்மார், ஈரான், சோமாலியா, சூடான் உள்ளிட்ட 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான நிர்வாக உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…