இலங்கை

ஹல்லொலுவ சம்பவம் – சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சந்தேக நபர் இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளித்தார்.

இந்த வாக்குமூலங்கள் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் பாரிஸ் என்ற சந்தேக நபரால் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நேற்று உத்தரவிட்டார், அன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…