உலகம்

ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமுல்படுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

எலாக் மஸ்க் தற்போது கூறியருப்பதாவது, எம்.பி.க்கள் சட்டமூலத்தை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நான் உதவியிருக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருப்பார். டிரம்ப் நன்றி கெட்டவர். சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாலேயே அவர் அதனை வெளியிடவில்லை.

நாசா உடனான டிராகன் விண்கலன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.

இதன்பின், டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலகுவதாக மஸ்க் அறிவித்தார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே பிரிவு உண்டானதை அடுத்து ஜனாதிபதி டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்று மஸ்க் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உக்ரைன் ரஷ்யா போரை பயன்படுத்தி நன்மையடைந்த அமெரிக்கா!

அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க…