உலகம்

பற்றி எரியும் அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

அமெரிக்காவின்(USA) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கம் (Immigration and Customs Enforcement) அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்த சட்டவிரோத வெளியேற்றத்திற்கு அமெரிக்காவிலேயே மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக, ட்ரம்பின் கடுமையான நடவடிக்கைகளை கலிபோர்னியா அரசு ஒத்துழைக்க மறுத்துள்ளது. அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.

கலிபோர்னியா மாகாணம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோ நாட்டுடனும் எல்லையை பகிர்கிறது. இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கடுமையான குடிவரவு கட்டுப்பாடுகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாகுக்கம் (Immigration and Customs Enforcement) அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…