No products in the cart.
பல நாள் ரகசியம் உடைத்த நடிகை!
ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை மேக்னா நாயுடு, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கோவா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
2002 இல் ‘கலியோன் கா சமன்’ இசை வீடியோ மூலம் புகழ்பெற்ற இவர், தமிழில் 2006 இல் வெளியான ‘ஜாம்பவான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், ‘குட்டி’ படத்தில் “கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்” பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடையே பிரபலமானார்.
ஆனால், அவரது கோவா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேக்னாவின் கூற்றுப்படி, சில மாதங்களுக்கு முன்பு தன்னை துணை நடிகர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு நபருக்கு கோவாவில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டார்.
அந்த நபர் ஆதார் அட்டை மற்றும் முகவரி சான்றிதழ்களை சமர்ப்பித்ததால், மேக்னா அவரை நம்பி வீட்டை வாடகைக்கு வழங்கினார். ஆரம்பத்தில் சில மாதங்கள் வாடகையை சரியாக செலுத்திய அந்த நபர், பின்னர் வாடகை செலுத்துவதை தவிர்த்து இழுத்தடித்துள்ளார்.
மும்பையில் இருந்த மேக்னா, வாடகை தொடர்பாக பேசுவதற்காக கோவா சென்றபோது, தனது வீட்டில் நடந்த திருட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த விலையுயர்ந்த ஆடைகள், பொருட்கள் மட்டுமல்லாமல், கட்டிலுக்கு அடியில் இருந்த அலமாரியை உடைத்து, மேக்னாவின் உள்ளாடைகள் உட்பட அனைத்தையும் அந்த நபர் திருடிச் சென்றுள்ளார்.
“இத்தனைக்கும் அது புது உள்ளாடைகள் கூட இல்லை. நான் பயன்படுத்திய உள்ளாடைகள். அதை எடுத்து சென்று என்ன செய்யப் போகிறார்?” என்று மேக்னா வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இணையத்தில் இந்த செய்தி வைரலாக பரவி வருவதாகவும் கூறினார். இந்த திருட்டு சம்பவம் குறித்து மேக்னா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, கோவாவில் உள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.