இந்தியா

ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் நேற்று (10) 25 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் இருந்து வந்த 11 இளைஞர்கள், அவர்களில் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.

அவர்களில் சிலர் குளிக்க ஆற்றில் இறங்கியபோது ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியஅவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியபோது, அவர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மீட்கப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…