No products in the cart.
தக் லைஃப் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
மணிரத்னம் இயக்கிய படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு கிடைக்கும்.
அவர் பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைய தக் லைஃப் என்ற படம் தயாராகியுள்ளது.
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி என பலர் நடிக்க உருவான இப்படம் கடந்த ஜுன் 5 ஆம் திகதி மாஸாக வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாக கர்நாடகாவில் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே படத்திற்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
பெரிய எதிர்ப்பார்ப்போடு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சரியான வரவேற்பு பெறவில்லை, இதனால் பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கியுள்ளது.
படம் வெளியாகி 6 நாள் முடிவில் மொத்தமாக இதுவரை படம் 84 கோடி ரூபா வரை மட்டுமே வசூலித்துள்ளது.