இந்தியா

லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் மும்பை திரும்பியது

மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட மூன்று மணி நேரம் ஆகாயத்தில் இருந்த பிறகு மீண்டும் மும்பைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்ற விமானம் காலை 5:39 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மூன்று மணி நேரம் காற்றில் இருந்த பிறகு மீண்டும் இவ்வாறு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதன் வான்வெளி மூடப்பட்டதால், அதன் பல விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன அல்லது அவற்றின் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றன.

பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

ஒபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு, நாட்டின் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…