இலங்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கு நிலை 2 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 01 இன் கீழ், கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, அகலவத்த, பாலிந்தனுவர, புலத்சிங்கள மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கண்டி மாவட்டத்தின் கங்கை கோறளை, கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, எஹலியகொட, நிவித்திகல, குருவிட்ட, எலபாத மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1இன் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…