இலங்கை

IMF உடனான இறுதித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வௌியிட்ட நம்பிக்கை

இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (ECF) திட்டமானது, சர்வதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசி சந்தர்ப்பமாக மாற்ற விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்தின் பங்கேற்புடன் இன்று (16) காலை கொழும்பில் நடைபெற்ற Sri Lanka’s Road to Recovery : Debt and Governance விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டுக்குள் கடன்களை அடைப்பதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியுமென இலங்கை நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…