No products in the cart.
கனடாவின் சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கனடாவின் சனத்தொகை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2025 முதல் காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் மந்தமாகியுள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 1 வரையிலான காலத்தில், கனடாவின் மொத்த சனத்தொகை வெறும் 20,107ல் மட்டுமே அதிகரித்துள்ளனர்.
கனடாவின் சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல் | Canadian Population Growth Continued To Slow
மொத்த மக்கள் தொகை
இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகை 41,548,787 ஆக உயர்ந்துள்ளது. இது 2020-இன் மூன்றாவது காலாண்டுக்குப் பின் காணப்படும் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
இந்த தரவுகள், 2024-ஆம் ஆண்டு கனடா மத்திய அரசு தற்காலிக மற்றும் நிரந்தர குடியேற்ற அளவுகளை குறைக்கும் முடிவெடுத்ததற்குப் பின் ஆறாவது தொடர் காலாண்டாக மக்கள் தொகை வளர்ச்சி பின்னடைந்துள்ளதைக் காட்டுகின்றன.
இந்த காலாண்டில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக இருந்தாகவும், 5,628 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல் | Canadian Population Growth Continued To Slow
இருப்பினும் 104,256 புதிய குடியிருப்பாளர்கள் (immigrants) நாட்டில் இணைந்து கொண்டுள்ளனர்.
17,410 பேர் நாடு விட்டு வெளியேறியதால், குடியேற்றத்தின் நிகரப் பலன் சிறிதளவு குறைந்தது.
அதே நேரத்தில் தற்காலிக குடியிருப்பாளர்கள் (non-permanent residents) எண்ணிக்கை 61,111 இழந்துள்ளது.
வளர்ச்சி சுருங்கியது என்றாலும், குடியேற்றம் இல்லையெனில் வளர்ச்சி கூட கிடையாது என்பது இந்த தரவுகள் மூலம் தெளிவாகிறது.