No products in the cart.
காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!
இந்தியாவை குறிவைத்து வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்கும், நிதி திரட்டுவதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் கனேடிய மண்ணை காலிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு தளமாக தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கனடான முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
கனடாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (CSIS) அண்மைய வருடாந்திர அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.