உலகம்

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் ரிக்டர் அளவில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான சேத விபரங்களும் இதுவரையில் வௌியாகவில்லை. ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

சோர்கேயிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் (93 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…