உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும்.
போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பாக அணித்தலைவர் ஷான்டோ 125 ஓட்டங்களையும் ஷட்மன் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதற்கமைய, பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 296 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.