சினிமா

வேற லெவல் கலெக்ஷன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் திகதி வெளிவந்த படம் குபேரா. இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், குபேரா திரைப்படம் தெலுங்கில் மட்டுமே இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் தளபதி விஜய்யின் கோட் படத்தின் வசூலை தாண்டியுள்ளது குபேரா. விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கோட் படம் தெலுங்கில் ரூ. 13 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…