சினிமா

வீடியோவை வெளியிட்டு அமபலப்படுத்திய பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது, தொழிலதிபர் ராஜ் கண்ணன், ஏற்கனவே திருமணமானதை மறைத்து திருமண மோசடி செய்ததாக பூந்தமல்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரிஹானாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜ் கண்ணன், ரிஹானா தன்னை ஏமாற்றி ₹18.5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த ரிஹானா, ஒரு ஆடியோவில், “ராஜ் கண்ணன் தான் எனக்கு ₹18 லட்சம் தர வேண்டும்.

நான் பணம் கேட்டபோது, அவர் என்னை மிரட்டி, கழுத்தில் கத்தி வைத்து தாலி கட்டினார்,” என்று கூறியுள்ளார். இதை மறுத்த ரங்கநாதன், “தாலி என்றால் என்னவென்று ரிஹானாவுக்கு தெரியாதா? முதல் கணவரை விவாகரத்து செய்யாமல், வேறொருவருடன் வாழ்ந்தது மாபெரும் தவறு.

‘என் இஷ்டத்துக்கு இருப்பேன்’ என்று ஆடியோவில் பேசியதில் இருந்தே அவரது குணம் தெரிகிறது,” என்று காட்டமாக விமர்சித்தார். மேலும், ராஜ் கண்ணன், “ரிஹானா என்னை மட்டுமல்ல, பலரை ஏமாற்றியுள்ளார்,” என்று கூறியதாகவும், இதற்கான ஆதாரங்களை காவல்துறையில் அளித்தால் ரிஹானாவின் நிலை மோசமாகும் எனவும் ரங்கநாதன் எச்சரித்தார்.

“ரிஹானாவும் ராஜ் கண்ணனும் சேர்ந்து என்ன தொழில் செய்தார்கள்? இப்படிப்பட்ட பெண்களால் மற்ற நடிகைகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது,” என்று குறிப்பிட்ட அவர், ரிஹானாவின் நடவடிக்கைகளை கடுமையாக விளாசினார்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…