உலகம்

ஈரானின் அணுசக்தி வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…