No products in the cart.
பிரம்மாண்ட தொகைக்கு வியாபாரம்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி முதல் முறையாக கூட்டணி சேர்கிறார்கள் என்பதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் தற்போது படத்தின் பிஸ்னஸ் சூடுபிடித்து இருக்கிறது.
கூலி படத்தின் தெலுங்கு உரிமை பிரம்மாண்ட தொகைக்கு விலைபோய் இருக்கிறதாம். நடிகர் நாகார்ஜூனா கூலி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து இருப்பதும் தெலுங்கில் பெரிய விலை கிடைக்க காரணம்.
45 கோடி ரூபாய்க்கு சுனில் நரங், சுரேஷ் பாபு மற்றும் தில் ராஜு ஆகியோர் இந்த படத்தை வாங்கி இருக்கிறார்களாம்.
தனுஷின் குபேரா படத்தை தயாரித்து இருந்த சுனில் நரங் இதில் பெரிய பங்கு பெற்றுள்ளார். கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தவர் தில் ராஜு என்பதும் குறிப்பிடத்தக்கது.