இலங்கை

22 பில்லியனுக்கும் அதிகளவான போதைப்பொருள் பறிமுதல்

22 பில்லியனுக்கும் அதிகளவான போதைப்பொருள் பறிமுதல்
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் 4 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் அந்த பணியகம் கைது செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கையகப்படுத்திய ஹெராயினின் பெறுமதி சுமார் ரூ. 10.84 பில்லியன் என்றும், ஐஸ் போதைப்பொருளின் பெறுமதிசு சுமார் ரூ. 12.16 பில்லியன் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…