டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்

ஜிம்பாப்வே – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் இடம்பெற்று வருகிறது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ஓட்டங்களை பெற்று டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.

Exit mobile version