No products in the cart.
பணவீக்கம் அதிகரிப்பு
2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது.
இது மே 2025 இல் -0.7% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கமானது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதத்தில் 4.3% ஆகக் குறைந்துள்ளது.
உணவல்லாப் பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -2.8%ஆக அதிகரித்துள்ளதோடு, இது 2025 மே மாதத்தில் -3.3%ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.