No products in the cart.
எச்சரித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சங்கம்
பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அளித்து வரும் பேட்டிகளில் தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி அவதூறாகவும் ஆபாசமாக பல்வேறு கருத்துகளை கூறி வருவதாக கூறி நடிகர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இது பற்றி சட்டப்படி வழக்கு தொடரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
நடிகர்கள் பற்றி தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும், நிறுத்த தவறினால் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி இருக்கின்றனர்.