இந்தியா

கேரளாவில் அதிரடி உத்தரவு

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களால் பொலிஸாரை தாக்கியிருக்கின்றனர். பொலிஸ் வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.

இந்த சம்பவத்தில் சில பொலிஸார் காயமடைந்தனர். இந்தநிலையில் கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் தெரிவித்து இருப்பதாவது,

பொலிஸார் மக்களை காப்பாற்றவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கியை பயன்படுத்தலாம். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது பொலிஸார் துப்பாக்கியை எடுத்துச் செல்லவேண்டும். அப்போது அவர்கள் பொலிஸாரை தாக்க முயன்றாலோ, தாக்குவதற்கு தயாராக இருந்தாலோ தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு பொலிஸார் தயங்கக்கூடாது. காவல்துறையினரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஏ.டி.ஜி.பி. உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…