No products in the cart.
இலங்கைக்கு IMF இதுவரை 1.74 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியுள்ளது
சர்வதேச நாணய நிதியம் இதுவரை நாட்டிற்கு 1.74 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது என்று அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிய கடன் தொகை 9 தவணைகளில் பெறப்பட உள்ளதாகவும், அவற்றில் 5 தவணைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜூலை 3 ஆம் திகதி 5ஆவது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க இதனைத் தெரிவித்தார்