No products in the cart.
5 வயது சிறுவன் திடீர் மரணம்- மித்தெனியவில் சோகம்
மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் திடீர் நோய் நிலைமை காரணமாக ஐந்து வயது சிறுவன் ஒருவன் நேற்று (07) உயிரிழந்துள்ளான்.
சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சிறுவன் கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.