No products in the cart.
அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்களால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதுமே, தன்னை மொத்த உலகத்துக்கும் தலைவர்போல நினைத்துக்கொண்ட ட்ரம்ப், சகட்டு மேனிக்கு வரிகள் விதிக்கத் துவங்கினார்.
மேலும், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்ட, அரசியல்வாதிகள்தான் அவரைக் கண்டு பயந்தார்கள்.
அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்களால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு | Us Face Loss By Candians Boycott Us Product Travel
ஆனால், கனேடிய மக்கள் அவரைக் கண்டு பயப்படவில்லை. ட்ரம்பை ஒரு கை பார்க்கவேண்டும் என முடிவு செய்த மக்கள், கனேடிய பொருட்களை புறக்கணிக்கத் துவங்கினார்கள்.
அடுத்த கட்டமாக, கனடாவின் பொருளாதாரத்துடன் வரிகள் மூலம் விளையாடும் ட்ரம்புக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்த மக்கள், அமெரிக்க சுற்றுலாவை புறக்கணிக்கத் துவங்கினார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்களால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு என்ன என்பது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், Vancity என்னும் ஆய்வமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வாஷிங்டனில் கனேடியர்கள் செய்யும் செலவு 47 சதவிகிதமும், மொத்த அமெரிக்காவில் 33 சதவிகிதமும் குறைந்துள்ளது.