சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ படத்தின் வௌியீட்டு திகதி அறிவிப்பு

‘நான்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்’ திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25ஆவது படமான சக்தித் திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், இப்படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனேவே எகிறவைத்துள்ளது.

What's your reaction?

Related Posts

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்?

தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது…