சினிமா

நடிகை வனிதா படத்தின் பாடலுக்கு எதிராக இளையராஜா முறையீடு

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ரொபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.

வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரொபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் சட்டத்தரணி சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.

அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில், தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்?

தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது…