சினிமா

இயக்குநர் உடைத்த ரகசியம்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி.

மண்மணம் மாறாத கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். தலைவன் தலைவி திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ‘குடும்ப படம் என்றாலே சீரியல், கிரிஞ் என்று சொல்லி விடுவார்கள். கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாரிவிடும் என்பது உண்மை தான். அது போன்ற குடும்ப படங்கள் எடுப்பது கடினம்.

கடைகுட்டி சிங்கம் ஓடின உடன், சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படம் எனக்கு பண்ணுங்கள் என்று கேட்டார், அப்படி வந்ததுதான் நம்ம வீட்டு பிள்ளை.

இப்போது தலைவன் தலைவி ஓடியது என்றால், ஹீரோக்கள் இப்படி ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்பார்கள். ‘தலைவன் தலைவி’ எல்லோருக்குமான படமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…