இலங்கை

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியத்தை நுகர்ந்தன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்தி பேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார்.

எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்தார் ,

தலவாக்கலை பகுதியில் இயங்கும் குறித்த தமிழ் பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்த நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…