இலங்கை

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

மேலும், தேயிலையின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுடன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் தேயிலைத் தொழிற்துறையை முன்னேற்றுவதாகக் கூறி, சர்வதேச நாடுகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்காக மட்டும் 196.5 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்தத் திட்டங்களுக்காக முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோர் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலையின் பெயரை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இலங்கை தேயிலை சபை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன, இரத்தினபுரி பிரதேச செயலாளர் கே.எஸ். நிசாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…