No products in the cart.
மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் இன்று (19 ) வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது
இவ்வாறு உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வக்குமார் (வயது 44) என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.