சினிமா

வெளிவந்த அதிரடி தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது மதராஸி மற்றும் பராசத்தி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதை தவிர அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சில படங்களும் உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் உடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன் கைகோர்த்திருக்கும் படம்தான் மதராஸி. இப்படத்தில் வித்யுத் ஜாம்வல், ருக்மிணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 5 ஆம் திகதி பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல் OTT உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…