மறைந்த அஸ்கிரிய மகா விஹாரையின் அனுநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தற்போது அஸ்கிரிய மகா விஹாரையின் பிரவர உபாலி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூதவுடல் தொடர்பான தகன நிகழ்வு வியாழக்கிழமை (24) பிற்பகல் 2:30 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் முழு அரச அனுசரணையுடன் நடைபெறும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு அறிவித்துள்ளது.
