இலங்கை

504 விமானங்கள் இரத்து!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் இன்று புறப்படவிருந்த UL 503 மற்றும் 504 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது

குறித்த விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டதையடுத்து இன்று புறப்படவிருந்த UL 503 (கொழும்பு-லண்டன்) மற்றும் UL 504 (லண்டன்-கொழும்பு) ஆகிய விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை இங்கிலாந்து நேரப்படி இரவு 23:59 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்பதோடு இந்த விமானங்களில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த பயணிகள் மேலதிக தகவல்களுக்காக பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…