கனடா

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

கனடாவில் பொலிஸ் துறையினால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சியாகும். குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு, குற்றச் செயல்கள் (non-violent crimes) குறைந்தளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்! | Important Information Crimes Taking Place Canada

அத்துடன் சொத்துக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் போன்றவையைக் கொண்ட குற்றத் தீவிரத்தன்மை குறியீடு கடந்த ஆண்டு 6 வீதமாக குறைந்துள்ளது.

இது 2021 முதல் 2023 வரை 9 வீதமளவில் உயர்ந்திருந்தது. மேலும், வன்முறைக் குற்றத் தீவிரத்தன்மை குறியீடு கடந்த ஆண்டில் 1% மட்டுமே குறைந்தது. இதன் தாக்கம் மொத்த குற்றக் குறியீட்டில் குறைவாக இருந்தது.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் இது 15% உயர்வினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

கனடிய நகராட்சித் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். கனடாவின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற நகராட்சி இடைத்தேர்தலில் நீதன் ஷான் என்று அழைக்கப்படும் நீதன் சண்முகராஜா…