கனடா

கனடாவில் மனைவி பிள்ளைகள் ; யாழ் சென்ற குடும்பஸ்தர் மரணம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

கனடாவில் மனைவி பிள்ளைகள் ; யாழ் சென்ற குடும்பஸ்தர் மரணம் | Wife And Children In Canada Husband Dies Jaffna

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…