இலங்கை

திறந்த பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தாரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கை வந்திருந்தனர். ஓர் நான்கு நாள் கல்விச் சுற்றுலாவாக திறந்த பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் எவ்வாறு பிரித்தானிய பாராளுமன்றத்திலும் இலங்கையிலும் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் வினைத் திறனாக எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பிலும் இவ் சுற்றலாவானது அமைந்திருந்தது. திறந்த பாராளுமன்றத்திற்கான பாராளுமன்றக் குழுத் தலைவர் என்னும் அடிப்படையில் என்னுடனான இவ் கலந்துரையாடலானது இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.” என்றார்.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…