சினிமா

40 வயதில் கர்ப்பமான நடிகை பாவனா!

1996 ஆம் ஆண்டு தலு மொழியில் வெளிவந்த மாரிபலா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பாவனா ராமண்ணா. இதன்பின் 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார்.மேலும் இந்தி, கன்னட மொழியில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

40 வயதாகும் நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை பாவனா பதிவிட்டுள்ளது, ‘புதிய அத்தியாயம், ஒரு புதிய தாளம். நான் இதை சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இங்கு நான் இரட்டை குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நன்றியால் நிரம்பி வழிகிறேன்.

எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. நாள், எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன’ என பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…