இலங்கை

லலித் குகன் வழக்குத் தொடர்பில் வெளியானது கோட்டாபயவின் அறிவிப்பு

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமற்போன வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் செய்யப்பட்ட ஹபியஸ் கொர்ப்பஸ் வழக்கில் சாட்சியம்வழங்கத் தயாராக உள்ளதாக கோட்டாபயவின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தினம் அறிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் சட்டப்பூர்வமாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ரோமேஷ் டி சில்வா இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்தில் சாட்சி அளிக்க முடியாது என்றும், ஆனால் கொழும்பில் உள்ள நீதிமன்றமொன்றில் சாட்சி அளிக்க தயார் என கோட்டாபய கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யசந்த கொடாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உச்சநீதிமன்ற குழு, சாட்சி அளிக்கும் கோரிக்கையை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நான்கு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ சாட்சி அளிக்கத் தயாராக இருப்பதால், வழக்கை முடிக்க வேண்டும் எனவும் அவரது தரப்பில் வாதம் வழங்கப்பட்டது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நுவன் போபகே அவரும் உடன்பாடும் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையை முடிக்க நீதிமன்றம் தீர்மானித்தது. இந்த வழக்கு 2011 டிசம்பர் 9 ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரது காணாமற்போன வழக்கில் 2019இல், அந்த நேரத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது எனக் கூறி, அவர் அந்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த அறிவுறுத்தலை இரத்துச் செய்து அவரை சாட்சியாக அழைக்கும் உத்தரவை இடைநிறுத்திய நிலையில், இந்த தீர்ப்பை நீக்குவதற்காகவே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…