No products in the cart.
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!
ஜனாதிபதி அநுர குமார திசநாயக கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மஹிந்த ஜெயதிஸ்ஸ கூறும்போது, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின்போது கையெழுத்தாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவோட் (நிலை 1) மற்றும் 70 மெகாவோட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை, இலங்கை மின்சார சபை, இந்திய தேசிய வெப்ப மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக, இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின் நிலையத்தை இந்தியா கட்ட இருந்தது. தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின் நிலையமாக மாற்றப்படுகிறது.