No products in the cart.
விஜயின் தேசிய மாநாட்டிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நடிகர் விஜய் தலைமையில் செயற்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது தேசிய மாநாட்டை நடத்துவதற்கான திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டை எதிர்வரும் 25ஆம் திகதி மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் முன்னதாக அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் திகதி மதுரை மாவட்டம் பொலிஸ் நிலையத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தினால் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் விநாயகர் சதுர்த்தி 27ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு திகதியை மாற்றுமாறு பொலிஸார் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி மாநாடு நடத்த அனுமதி தருமாறு தவெக தரப்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17ஆம் திகதியும் மாநாடு நடத்த பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது.
வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் 22ஆம் திகதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தவெக மாநாடு திகதி தொடர்பில் கட்சி தரப்பில் ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.