இந்தியா

3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகியோரை கழுத்தறுத்து கொன்று விட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. 

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் மனைவி பாரதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…